இவ்­வ­ருடம் தேர்­த­லுக்கு செல்ல முடி­யாது: அமைச்சர் பைசர் முஸ்­தபா

0
176

எல்லை நிர்­ணய அறிக்­கை­களில் கடு­மை­யான குறை­பா­டுகள் காணப்­ப­டு­வதால் அவற்­றிற்­கான தீர்­வு­களை காணாது இவ்­வ­ருடம் தேர்­த­லுக்கு செல்ல முடி­யாது என உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபை­க­ளுக்­கான அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

கண்டி – மட­வல பிர­தே­சத்தில் நடை­பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய போதே அமைச்சர் பைசர் முஸ்­தபா இதனை தெரி­வித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

எல்லை நிர்­ணய அறிக்­கைக்­க­மைய அவற்றை கவ­னத்தில் கொள்­ளாமல் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணி­யி­னரின் தேவைக்­காக தேர்­த­லுக்கு செல்ல முடி­யாது. அர­சாங்கம் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் பொது மக்­களை பாது­காப்­ப­தற்கு கட­மைப்­பட்­டுள்­ளது.

நடை­மு­றையில் இருந்து வரும் எல்லை நிர்­ணய திருத்த அறிக்­கையில் உள்ள குறை­பா­டுகள் அனைத்தும் எதிர்­வரும் ஆகஸ்ட் மாத­ம­ளவில் கூட பூர்த்­தி­ய­டைந்து விடாது. இதனை நன்கறிந்த ஜனா­தி­பதி உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை அடுத்த வருடம் ஆரம்­பத்தில் நடத்­த­வி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.

இத்­தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தற்­கான உண்மைக் கார­ணங்­களை புரிந்து கொள்­ளாமல் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரும் பிரி­வினர் இதன் உண்­மை­க­ளையும் யதார்த்­தத்­தையும் புரிந்து தெரிந்து இவற்றின் திருத்த நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தீர்வுகளை காணவும் செயற்பட வேண்டும்.

அதேவேளை இன்றைய அரசாங்கத்திற்கு தேர்தலை பிற்போடுவதற்கான எவ்வித தேவைகளும் இல்லை என்றார்.

LEAVE A REPLY