பாக்தாத் நகரில் இரட்டை கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி

0
170

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்தனர்.

அல்-ஹுசைனியா மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப்படை சோதனைச் சாவடியின் மீது நேற்று முதலில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அடுத்ததாக, அரப் அல்-ஜபவுர் பகுதியில் பேரீச்சம்பழ மரங்கள் மற்றும் பனை மரங்கள் நிறைந்த பண்ணை அருகே ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது கார் குண்டு வெடிப்பில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இவ்விரு தாக்குதல்களிலும் சுமார் 40 பேர் படுகாயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளாத நிலையில், இப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற அதிரடி தாக்குதல்களை நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY