அமைச்சர் ஹலீமுடன் NFGG விசேட கலந்துரையடல்

0
254

(NFGG ஊடகப் பிரிவு)

IMG-20160423-WA0023முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் AHM. ஹலீம் அவர்களுக்கும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை (22.04.2016) காத்தான்குடியில் இடம்பெற்றது.

காத்தான்குடிக்கு விஷேட விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த அமைச்சர் ஹலீம் அவர்கள் NFGGயின் அழைப்பை ஏற்று அதன் காத்தான்குடி பிராந்திய காரியாலயத்திற்கு வருகை தந்திருந்ததோடு, அங்கு ஒரு விஷேட கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

IMG-20160423-WA0028NFGGயின் தவிசாளர் MM அப்துர்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் NFGGயின் கிழக்குப்பிராந்திய செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களும் முன்னாள் காத்தான்குடி பிரதேச சபைத்தவிசாளர் MCM காசிம், முன்னாள் நகரசபை உறுப்பினர்களான MAHM மிஹ்லார், MHA நசீர் ஆகியோர்களும் NFGGயின் சிரேஷ்ட உறுப்பினர்களான MSM அமீரலி ஆசிரியர், SM பஷீர் ஆசிரியர், MAM பைசர், MIM மக்பூல், MACM முஹ்சின், மகமட் மஹ்ரூப், MYM சரீப், ALM சபீல் நளீமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

IMG-20160423-WA0018அத்துடன் UNPயின் காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்பாளர் MHM. முஸ்தபா அவர்களும் ஏனைய UNP பிரமுகர்களான கையூம் ஆசிரியர், முபாரக் ஆசிரியர் ஆகியோர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியிலாளர் அப்துர் ரஹ்மான், நல்லாட்சியினை வெறும் கோஷமாக அன்றி ஒரு அரசியல் இலட்சியமாகக் கொண்டு நேர்மையான சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் NFGG இறைவனுடைய உதவியினால் கடந்த பத்து வருட காலமாக காத்தான்குடி பிரதேசத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்றுக்கொண்ட தனிப்பெரும் கட்சியாக வளர்ச்சி பெற்றிருப்பது மாத்திரமன்றி, மட்டக்களப்பு திருக்கோண மலை மாவட்டங்களில் அரசியல் தீர்மானமிக்க சக்தியாக வளர்ந்திருப்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

IMG-20160423-WA0021அத்துடன் UNP மிக பலவீனமாக காணப்பட்ட காலகட்டத்திலிருந்து இன்று வரை எவ்வாறான ஒத்துழைப்பகளை NFGG, UNPக்கு வழங்கி வந்துள்ளது என்பதினையும் அப்துர் ரஹ்மான் எடுத்துக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹலிம் அவர்கள், மட்டக்களப்பு திருகோணமலை மாத்திரமன்றி தமது சொந்த இடமான அக்குரணை பிரதேசத்திலும் கூட தமக்கும் தமது கட்சியின் வேலைத் திட்டங்களுக்கும் NFGG நெருக்கமான ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளதாக தெரிவித்ததோடு, பெரும் பெரும் அரசியல் ஜாம்பவான்களுக்கு முகம் கொடுத்து இப்படியான பெரும்பான்மை பலமிக்க சக்தியாக NFGG வளர்ந்திருப்பதையிட்டு தான் மகிழ்ச்சியுடன் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் UNP- NFGG க்கிடையிலான உறவினை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தி மக்களுக்கு பிரயோசனமான அரசியல் வேலைத்திட்டங்களை இரண்டு கட்சிகளும் இணைந்து இன்னும் சிறப்பான முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

IMG-20160423-WA0020 IMG-20160423-WA0022

LEAVE A REPLY