கொங்ரீட் வீதிக்கு மேலால் மழை நீர் தேங்கி நிற்கும் பிரச்சனைக்கு வடிகான் அமைத்து முற்றுப்புள்ளி

0
376

காத்தான்குடி அமானுல்லாஹ் வீதி முழுமையாக செப்பனிடப்படாத நிலையில் மழை காலங்களில் அவ்வீதியில் வெள்ளநீர் தேங்கி நின்று மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலைமையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் 29.03.2016 அன்று நேரில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தற்போது கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் 10 லட்சம் ரூபா நிதி இவ்வீதியின் வடிகாலமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று குறித்த வீதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரை அழைத்து வடிகாலமைப்பது தொடர்பான ஆலோசனைகளை பரிமாரிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்திலுள்ள தோணா பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அப்பிரதேச மக்கள் தமது பிரதேசத்திலுள்ள தோணாவில் மழைநீர் மற்றும் கழிவு நீர் என்பன தேங்கி நிற்பதாகவும் மாரி காலங்களில் மழைநீர் நிரம்பி தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதாகவும் இதானால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மிக நீண்ட காலமாக இப்பிரச்சனை இந்த பகுதியில் இருக்கின்ற போதிலும் அதனை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் தேர்தல் காலங்களில் மாத்திரம் இப்பிரதேசத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகள் அதன் போது வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிச்செல்கின்றார்கள் என்றும் தெரிவித்தனர்.

இப்பிரச்சனை பல கோடி ரூபாய் செலவில் தீர்க்கப்பட வேண்டிய பாரியதொரு பிரச்சனை எனவும் இருப்பினும் இது தொடர்பாக தன்னால் முடியுமான அளவு இப்பிரச்சனைக்கு தீர்வுக்கான முயற்சிப்பதாகவும், இந்த விடயம் தொடர்பாக எதிர் அரசியலில் உள்ளவர்களிடம் சென்றுகூட தீர்வுகாண்பதற்கு தாம் தயாராக உள்ளதாக அம்மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உங்களை திருப்திப்படுத்தி இவ்விடத்தை விட்டு செல்வதற்காக இப்பிரச்சனையினை நிவர்த்தி செய்து தருவேன் என்ற போலியான வாக்குறுதியை உறுதியாக என்னால் அளிக்க முடியாது எனவும் இருப்பினும் இது தொடர்பாக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

DSC_2884 DSC_2946 DSC_2978 DSC_2984 DSC_3007 DSC_8897 DSC_8900

LEAVE A REPLY