காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்களை தடுப்பதற்கான NFGGயின் தீர்வு யோசனைகள் பொதுமக்களிடம் சமர்ப்பிப்பு!

0
226

(PMGG ஊடகப்பிரிவு)

காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தி நிரந்தரமான தீர்வொன்றை எவ்வாறு காணமுடியும் என்கின்ற திட்ட முன் மொழிவுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) தற்பொழுது பொதுமக்களிடம் சமர்ப்பித்திருக்கின்றது.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் NFGG இதற்கான தீர்வு முன்மொழிவுகளை பொதுமக்களிடம் சமர்ப்பிப்பதாக ஏற்கனவே உறுதியளித்திருந்தது. இதற்கு அமைவாகவே நேற்று (22) NFGGயின் உத்தியோக பூர்வ வெளியீடான ‘புதிய நாளை’ பத்திரிகை மூலமாக இந்த தீர்வு முன்மொழிவுகள் காத்தான்குடி மக்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறன.

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் என்ற பிரச்சினையானது எழுந்தமான சில நடவடிக்கைகள் மூலமாகவன்றி முறையான அணுகுமுறை ஒன்றினூடாகவே நிரந்தரமாக தீர்க்கப்பட முடியும் என NFGG தெரிவித்துள்ளது. அந்த வகையில் இவ்வீதி விபத்துக்களுக்கான பிரதான காரணங்களை அடையாளப்படுத்தி அவை ஒவ்வொன்றுக்குமான தீர்வினை காணும் வகையிலேயே தற்பொழுது NFGG தீர்வு முன் மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

அத்தோடு, இந்த முன்மொழிவுகள் தொடர்பில் பொறியாலாளர்கள், துறை சார்ந்தவர்கள், பிரதன வீதி வர்த்தகர்கள் உள்ளிட்ட சகலரினதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் NFGG கோரியுள்ளது.

நேற்றைய ‘புதிய நாளை’ விநியோகம் வழமை போன்று NFGG யின் சிரேஷ்ட உறுப்பினர்களால் முன்நின்று மேற்கொள்ளப்பட்டது. இதில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான், அமீர் அலி ஆசிரியர், ALM.சபீல் நளீமிய்யா, MYM ஷரீப், அப்துல் வாஹித், MHM மிஹ்லார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG-20160422-WA0005 IMG-20160422-WA0011 IMG-20160422-WA0013

LEAVE A REPLY