(Poem) தோட்டத் தொழிலாளி

0
53

Circular-pattern-at-a-tea-estate-in-Sri-Lankaகொழுந்து பறிக்கும் சுப்பையா
எழுந்து நிற்பது எப்பையா
விழுந்து கிடக்கும் நீ தொடர்ந்து
தளர்ந்து போவது தப்பையா.

குடிக்கும் பழக்கம் விட்டு விடு.
படிக்கும் பிள்ளைக்கு தட்டிக் கொடு
நடிக்கும் அரசியல் வாதிக்கு
பிடிக்கும் வாலை வெட்டி விடு.

உற்சாக தேயிலை பானத்தை
உற்பத்தி செய்திடும் கறுப்பையா
உனக்கு உற்சாகம் வருதற்கு
ஊனக் கள் குடிப்பது வெறுப்பையா

கம்பனி கடும் பனி இரண்டாலும்
கஷ்டப்படுகிறார் லயத்தினிலே
கும்பலாய் இவர்களின் உழைப்புறுஞ்சி
கொம்பனி ஓடுது நயத்தினிலே.

தேயிலைச் செடியின் அடிதோண்டி
தேடிப் பார்த்தால் உடல் இருக்கும்
ஆயுளும் முடிவும் அத்தனையும்
தேயிலைக்காகவே கொடுத்திட்டார்

சொந்த வீடு சுகவாழ்வு
சுரண்டல் இல்லா வருமானம்
இந்த ஆசையெல்லாமே
இவர்கள் வாழ்வில் வெறும் கனவே.

(Mohamed Nizous)

LEAVE A REPLY