மஹிந்த விட்டுச் சென்ற மொத்த கடன் தொகை 7,390,899 மில்லியன் ரூபா

0
228

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச 2005 ஆம் ஆண்டு நாட்டை பொறு­பேற்கும் போது ஒரு லட்­சத்து 10 ஆயிரம் ரூபா­வாக இருந்த தனி­நபர் கட­னா­னது 2015 ஆம் ஆண்டு அவர் ஆட்­சியை விட்டுச் செல்லும் போது 4 லட்­சத்து 52 ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரித்­தி­ருந்­தாக அமைச்சர் கபீர் ஹாசீம் தெரி­வித்­துள்ளார்.

மாத்­த­றையில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அமைச்சர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்டில் உள்ள சகல மக்­களின் கடன் சுமையை அதி­க­ரித்து விட்டே மகிந்த ராஜ­பக்ச ஆட்­சியை விடடுச் சென்றார்.அதேபோல் மகிந்த ராஜ­பக்ச நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்ற போது நாட்டின் மொத்த கடன் 21 லட்­சத்து 39 ஆயி­ரத்து 500 மில்­லியன் ரூபா­வாக இருந்­தது. மகிந்த 2015 ஆம் ஆண்டு ஆட்­சியை விட்டு செல்லும் போது நாட்டின் மொத்த கடன் 73 லட்­சத்து 90 ஆயி­ரத்து 899 மில்­லியன் ரூபா.இத­னையே மகிந்த ராஜ­பக்ச நாட்­டுக்கு மிகு­தி­யாக வைத்து விட்டுச் சென்றார்.

நாடு தற்­போது கடன் பொறியில் சிக்­கி­யி­ருப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­ப­தியின் அர­சாங்­கமே காரணம்.பெற்ற கடன்­களில் தரகு பணம் பெற்­றனர். தேசிய உற்­பத்தி துறையை அழித்­தனர்.அபி­வி­ருத்தித் திட்­டங்­களை உரு­வாக்­காது, கண்­காட்சி திட்­டங்­களை உரு­வாக்­கினர். நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு உத­வாத அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஏற்­ப­டுத்­தினர்.

நாட்டை கட­னா­ளி­யாக்கி விட்டு, அந்த பணத்தை அழித்­தனர். இவற்றை யார் செய்­தனர் என்­பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இவ்­வா­றான நிலையில், கூட்டு எதிர்க்கட்சியினர் ஆடை அணிந்து கொண்டா மக்களை பற்றி பேசுகின்றனர் என நான் கேள்வி எழுப்புகிறேன் என்றார்.

#Vidivelli

LEAVE A REPLY