யுவராஜ் சிங் வீட்டின் வாசல் கதவு உடைந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி

0
249

அரியானா மாநிலம் சண்டிகரில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீடு உள்ளது. இந்த வீட்டின் வாசல் கதவு சமீபத்தில் உடைந்து விழுந்துள்ளது. இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் யாரும் இல்லை. யுவராஜ் சிங் மற்றும் அவரது தாயார் குருகிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த சண்டிகர் வீடு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, வாசல் கதவும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து யுவராஜ் சிங்கோ, அவரது குடும்பத்தினரோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY