யுவராஜ்சிங்கின் புதிய இலக்கு

0
220

2011-ம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கதாநாயகனாக விளங்கிய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அணியில் இடம் பெறவில்லை. சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த யுவராஜ்சிங் காயம் காரணமாக அரை இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் விலகினார்.

இந்த நிலையில் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட் ஆட்டத்தை நான் அதிகம் நேசிப்பவன். ஓய்வு பெற்ற பிறகு இன்னும் சில ஆண்டுகள் விளையாடி இருக்கலாமே? என்று நினைக்க விரும்பவில்லை. ஆடியது போதும் என்ற எண்ணம் உருவாகும் போது ஓய்வு முடிவை எடுப்பேன்.

என்னால் இன்னும் சில ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன். மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன். 2019-ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்காகும். கடினமாக உழைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அந்த இலக்கை அடைய முடியும் என்று நினைக்கிறேன். 2019-ம் ஆண்டு உலக கோப்பை இலக்கை எட்டினால் அது எனக்கு பெரிய விஷயமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY