பீகார் மாநிலத்தில் தீ விபத்து: 10 பேர் உயிரோடு எரிந்து பலி

0
252

பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் தரார் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஹரிநகர் டோலா பகுதியில் இந்திரா நிவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளில் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் கண் இமைக்கும் நேரத்தில் தீ, பிற வீடுகளுக்கும் பரவியது. அந்த வீடுகளுக்கு செல்கிற பிரதான நுழைவாயில் ‘போல்ட்’ போட்டு முறுக்கி பூட்டப்பட்டிருந்ததால் யாராலும் வெளியேயும் வர முடியவில்லை. வீடுகளில் இருந்தவர்கள் அலறியும், தீ பயங்கரமாக எரிந்ததால் யாராலும் உள்ளே சென்று அவர்களை மீட்கவும் முடியவில்லை.

தீயணைக்கும் படையினர் வந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த வீடுகளில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரோடு எரிந்து பிணமாயினர். அவர்கள் உடல்கள் அடையாளம் காண முடியாதபடி கரிக்கட்டைகள் ஆகின.

இந்த துயர சம்பவம், அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY