முஷாரப் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கை போலியானது

0
180

பாகிஸ்தானில் 1999–ம் ஆண்டு ராணுவ புரட்சியை ஏற்படுத்தி 2008–ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர், பர்வேஸ் முஷாரப். 72 வயது முஷாரப் 2007–ம் ஆண்டு சட்டவிரோதமாக நீதிபதிகளை சிறைபிடித்ததாக தொடரப்பட்ட வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, வெளிநாட்டில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவர் 2013–ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் தவறாமல் கோர்ட்டில் ஆஜர் ஆவேன் என்றும் கூறினார்.

2 மாதங்களுக்கு முன்பாக, தனக்கு முதுகு தண்டுவடத்தில் கோளாறு இருப்பதாக கூறி வெளிநாடு சென்று சிகிச்சை பெற சுப்ரீம் கோர்ட்டு மூலம் முஷாரப் அனுமதி கேட்டார். இதற்கு கோர்ட்டும், பாகிஸ்தான் அரசும் ஒப்புதல் அளித்தன. இதனால் அவர் கடந்த மாதம் துபாய்க்கு புறப்பட்டு சென்றார்.

இதனிடையே, இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் முஷாரப் மீதான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முஷாரப்பின் வழக்கறிஞர் அக்தர் ஷா அவரது மருத்துவ அறிக்கையை ஏப்ரல் 6-ம் தேதி தாக்கல் செய்தார். மேலும், கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வெளியில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஏப்ரல் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முஷாரப்பின் மருத்துவ அறிக்கை போலியானது என்று தெரிவித்துள்ளது.

மேலும், மே 20-ம் தேதிக்குள் எங்கு இருந்தாலும் முஷாரப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி இஸ்லாமாபாத் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

2013ல் தொடங்கி இதுவரை 42 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து முஷாரப்பிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY