சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் 28ஆவது இளைஞர் விளையாட்டு விழா நாளை

0
91

(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் 28ஆவது இளைஞர் விளையாட்டு விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியலவில் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியால மைதானத்தில் இளைஞர் சம்மேளன தலைவர் ஏ.ஆர்.அஷாம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறபிக்கவுள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், எம்.எல்.ஏ.அமீர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சுகத் ஹேவாவித்தாரண, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவி பணிப்பாளர் டி.எம்.சிசிரகுமார, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி செயலாளர் எம்.எம்.ஹாசீக், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்;பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.உபுல்பிரிய, உள்ளிட்ட பல அதிதிகளும்; கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது இளைஞர் கழக விளையாட்டு வீர, வீராங்கணைகள் பதக்கம், வெற்றிக் கிண்ணம் மற்றும் சன்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் பாரம்பறிய கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதாகவும் சம்மாந்துறை இளைஞர் சம்மேளன தலைவர் ஏ.ஆர்.அஷாம் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY