தாஜு­தீனின் படு­கொலை; மூன்று முக்கிய நபர்கள் கைதாவர்: புதிய பொலிஸ் மா அதிபர் தகவல்

0
245

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை விவ­கா­ரத்தில் மேலும் முக்கிய மூன்று நபர்கள் கைது செய்யப்படுவர் என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று தெரிவித்தார்.

புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் கப்பம் பெறுதலை நிறுத்தல், போதை பொருள் சோதனை நடவடிக்கைகளின் போது முறையாக நடந்து கொள்ளல், நற்பண்புடன் இருத்தல் ஆகிய

மூன்று விடயங்களை கட்டாயம் பின்பற்றி பொலிஸின் அடையாளம் மற்றும் கௌரவத்தை மீண்டும் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் பொலிஸாரின் மீது காணப்படும் கருப்பு புள்ளிகளை அகற்றும் காலம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

#Virakesari

LEAVE A REPLY