மொபைல் உலகை ஆக்கிரமிக்கும் iOS 9 இயங்குதளம்

0
177

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக iOS எனும் பிரத்தியேக இயங்குதளத்தினை தருகின்றமை தெரிந்ததே.

அண்மையில் இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 வெளியிடப்பட்டிருந்தது.

இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்தில் சுமார் 84 சதவீதம் வரையிலான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இம் மாதம் 18ம் திகதி வரையான புள்ளிவிபரத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை எஞ்சிய 16 சதவீதமே iOS இயங்குதளத்தின் ஏனைய பதிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

அதாவது iOS 8 பதிப்பானது 11 சதவீதமான மொபைல் சாதனங்களிலும், அதற்கு முன்னைய பதிப்புக்கள் 5 சதவீதமான சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இதற்கிடையில் அடுத்த பதிப்பான iOS 10 இனை அறிமுகம் செய்வது தொடர்பான தகவலை ஜுன் மாதம் இடம்பெறவுள்ள Worldwide Developer மாநாட்டில் அப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகள் iOS 10 பதிப்பினை உடையதாக அறிமுகம் செய்யப்படும்.

LEAVE A REPLY