இராஜாங்க அமைச்சர் தலைமையில் காத்தான்குடி அபிவிருத்திக் குழு கூட்டம்

0
340

(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பிரதேச செயலத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (22) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இவ் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும் 2016 ஆம் ஆண்டில் இடம்பெறவிருக்கின்ற அபிவிருத்திகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 21 திட்டங்களுக்கு 21 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி 18 கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் 18 மில்லியன் அபிவிருத்தி பணிகளுக்காக செலவிடப்படுமெனவும் தெரிவிக்கபட்டது.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த 167 கிராமசேவகர் பிரிவிலுள்ள 19 பயணாளிகளுக்கு வீடுகள் அமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுக்கு அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மெளலானா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு திணைக்கள உயர் அதிகாரிகள் வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட குழுக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக காத்தான்குடியிலுள்ள வீதிகள் நல்லாட்சி அரசாங்கத்தில் செப்பனிடப்படவுள்ளதாகவும் கூடுதலான அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Ah9ocbCLvTDQdufXDwo4Pz1j5jMEBs8gzIeywMvi3T6e AjsfnqH3hyEs0OsH_4YkW3CS-qCUpdiZOwiR4D6b_ctH IMG_20160422_094226-1024x575 IMG_20160422_094343-1024x575 IMG_20160422_094357-1024x575 IMG_20160422_094436-1024x575

LEAVE A REPLY