ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கம்; 2.4 மில்லியன் மக்களுக்கு நன்மை பயக்கும்

0
163

இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையால், கடற்றொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கி வாழுகின்ற 2.4 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சிறந்த பயனைத் தருமென கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடத்தின் பேராசிரியர் எச்.டீ. கருணாரத்ன தெரிவித்தார்.

கடந்த காலப்பகுதியில் கடற்றொழில் துறையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியுற்றமை மற்றும் மீன் ஏற்றுமதிக்கான தடை என்பன அந்த துறைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு மீன் ஏற்றுமதியின் மூலம் 252.7 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கை பெற்றுக்கொண்டபோதிலும், 2015 ஆம் ஆண்டில் அந்த தொகை 163.1 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் மீன் ஏற்றுமதியில் 35 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை நீக்கப்பட்டுள்ளதன் மூலம் மீன் உற்பத்தியில் எதிர்காலத்தில் நாடு சிறந்த பயனை அடைந்துகொள்வதற்கு வழயேற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள 65 க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் மற்றும் 1,700 க்கும் அதிகமான மீன்பிடி படகுகளின் உரிமையாளர் பெரிதும் நன்மையடைவார்கள் என கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் நிதிப்பீடத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY