நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடும் மழை?

0
206

வளிமண்டல உட்புற மாற்றத்தினால் நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 50 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் மேல் மற்றும் தென் கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவுகிறது. இடியுடன் கூடிய மழையின் போது அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY