சிக்கன் சுக்கா செய்வது எப்படி

0
124

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1கிலோ
வெங்காயம் – 4,
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3
கரம் மசாலா – அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்,
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் -1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு கைபிடியளவு.

செய்முறை :

* சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக போட்டு கழுவி நீர் வடிகட்டிக்கொள்ளவும்.

* ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.

* இஞ்சி பூண்டு வதக்கியவுடன் சிக்கன் சேர்த்து பிரட்டவும். அதிலேயே தண்ணீர் விடும்.

* மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.

* நன்றாக சுண்டி சிக்கன் வெந்து வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.இது எல்லாவகையான சாதம் வகைகளுக்கும், சப்பாத்தி, நாண் உடனும் தொட்டு சாப்பிடலாம்.

LEAVE A REPLY