அலி அப்துல்லாஹ்வின் சொத்துக்கள் முடக்கம்

0
156

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே. அவர் அந்த நாட்டின் மிகப்பெரும் கட்சியான பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார்.

துருக்கியில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் உள்ள சலேயின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. சபையின் முடிவுக்கு ஏற்ப, துருக்கி அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதே நேரத்தில் சலே, துருக்கியில் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ஏமன் நாட்டில் நீண்ட காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது, அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புக்கு, அதாவது 60 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3.96 லட்சம் கோடி) அவர் சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவருக்கு 20 நாடுகளில் சொத்துக்கள், ரொக்கம், பங்குகள், தங்கம், பிற மதிப்புவாய்ந்த பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY