பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

0
211

அரசாங்கத்தினால் எதிர்வரும் மாதம் வற்வரி அதிகரிக்கப்படவுள்ளதன் காரணமாக நாடாளாவிய ரீதியில் உள்ள பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையினையும் அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இந்த வற்வரி அதிகரிப்பில் உள்ளடக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலே, பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு 5 ரூபா முதல் 15 ரூபா வரையிலான விலை உயர்வடையும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY