ஊடக சுதந்திரத்தில் 24 இடங்கள் தாண்டி இலங்கை முன்னேற்றம்

0
156

2016-ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலை எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது. 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 6-வது ஆண்டாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2-வது, 3-வது இடங்களை முறையே நெதர்லாந்து, நார்வே நாடுகள் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இலங்கை கடந்த 2015-ல் 165-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 24 இடங்கள் முன்னேறி 141-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா 133, பாகிஸ்தான் 147, ஆப்கானிஸ்தான் 120, வங்காள தேசம் 144, நேபால் 105, மற்றும் பூட்டான் 94-வது இடத்திலும் உள்ளது.

சீனா 176-வது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்கா 44-வது இடத்திலும், ரஷ்யா 148-ம் இடத்திலும் உள்ளது.

LEAVE A REPLY