கைதிகளின் தொலைபேசிப் பாவணையை தடுக்க புதிய வேலைத்திட்டம்

0
192

சிறைச்சாலைக்குள் கைதிகளின் தொலைபேசிப் பாவணையை தடுக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

தொலைபேசி அழைப்புகளை காட்டிக் கொடுப்பதற்கான சமிஞ்சை உபகரணங்களை சிறைக் கூடங்களில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு மற்றும் நாட்டிலுள்ள தொலைபேசி நிறுவனங்களினது தலைவர்களிடமும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிறைச்சாலை வளாகத்திற்குள் தொலைப்பேசி அழைப்புகளை இடைநிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவுமு் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் மாதத்திற்குள் இந்த திட்டம் அமுல்படுத்தப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது காணப்படும் சமிஞ்சை கட்டமைப்பில் சிறிய கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை புதிய தொழிநுட்பத்தின் கீழ் சீர் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY