இம்முறை உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு இலங்கையில்

0
288

உலகளாவிய ரீதியில் நடைபெறும் 16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக நிலையத்தின் முக்கிய வருடாந்த நிகழ்வாக உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு காணப்படுகின்றது.

சர்வதேச வர்த்தக நிலையமானது (ITC) உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் இணைந்த நிறுவனமொன்றாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் உலகிலுள்ள பல முக்கிய முன்னணி வியாபார உயர் தொழில் நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ள உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டினை(WEDF) இம்முறை இலங்கையில் நடாத்த இந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் சர்வதேச வர்த்தக மையம் என்பன இணைந்து “வெற்றிக்கான வர்த்தகம்: இணைப்பு, போட்டி, மாற்றம்” என்ற தலைப்பின் கீழ் இம் மாநாட்டினை நடத்த உத்தேசித்துள்ளனர்.

சர்வதேச வர்த்தகம் தொடர்பில் இந்நாட்டில் காணப்படும் திறந்த தன்மையினையும் அதற்காக காணப்படும் உகந்த சூழலினையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு இம்மாநாடு வழிவகுக்கும். அதனடிப்படையில் சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிதியுதவியுடன் 2016 ஆம் ஆண்டின் உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டின் நடாத்தும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச வர்த்தக நிலையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY