(Poem) ஸ்க்றீன் ஷொட்

0
60

இஷ்டத்துக்கு சற்றுவார்
எல்லாமே கொட்டுவார்
புஷ்ஷிட மேற்றர் முதல்
பொஞ்சாதி டோச்சர் வரை
கஷ்டமெல்லாம் சொல்லி
கணக்கின்றிச் சற்றுவார்

கூத்தடித்த கதையெல்லாம்
கொஞ்சம் பொய் சேர்த்து
சாத்தானின் வசனத்தையும்
சரி பாதி மிக்ஸ் பண்ணி
ஆத்தாடி சற்றுவார்
ஆத்திரமும் கொட்டுவார்

இங்கால இருப்பவன்
இப்லீஸா இருந்திட்டா
அங்கால அனுப்புகிற
அத்தனை மேற்றரையும்
பங்காளி ஒன்றுக்கு
பகிர்ந்து கொள்வதற்காய்
இங்கிதம் பேணாமல்
ஸ்க்றீன்சொட் எடுத்திடுவான்.

அப்புறம் அச் சொட்டை
அடுத்தவனுக்கனுப்ப
சுப்பர் மேட்டரொண்டு
சூடாய்க் கிடைத்ததாக
பேக் ஐடி மூலமாக
பெரிசாகப் போட்டு
தன் ஐடி மூலமாய்
தானே செயார் செய்வார்.

கதைத்த ஆசாமிக்கு
கடைசியில் வந்து சேர
பதைத்துப் பயந்து
பட்டென்று பிளேட் மாற்றி
ஹேக் செய்யப் பட்டதாய்
கெதியாக அறிக்கை ஒன்றை
ஆக்களுக்கு அனுப்பி
ஆள் எஸ்கேப் ஆவார்.

இன்னும் சில சாத்தான்கள்
இருக்கிறார்கள் fbயில்
போலியான சற்றிங்களை
பொய்யாக உருவாக்கும்
அப்ளிகேஷன் போட்டு
அதன் மூலம் உருவாக்கி
ஸ்கிறீன் சொட் எடுத்து
எல்லோர்க்கும் அனுப்புவார்

நல்லவர்கள் மானத்தை
நாறடித்து மகிழ்வார்.
அடுத்தவரின் மானம்
அனைவருக்கும் ஹறாமாகும்
என்ற விடயத்தை
ஏறெடுத்தும் பார்க்காது
இஷ்டத்துக்கு விளையாடும்
இண்டனெட் சகோதரர்கள்
கஷ்டமுள்ள நாளொன்றைக்
கவனத்தில் கொள்ளட்டும்.

(நிஷவ்ஸ்)

LEAVE A REPLY