மெக்சிகோ நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி – 105 பேர் படுகாயம்

0
136

மெக்சிகோ நாட்டில் உள்ள துறைமுக நகரம் ஹோட்சா கொல்காஸ். இந்த துறைமுகத்தில் அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. துறைமுகத்தையட்டி அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான பெமக்ஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

இன்று அதிகாலை அந்த ஆலையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்த எண்ணெய் டேங்குகள் வெடித்து சிதறின. இதனால் ஆலை முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அதன் அருகில் தனியார் ரசயான தொழிற்சாலை இருந்தது. அந்த ஆலையிலும் தீப்பற்றியது.

இரு ஆலைகளும் பயங்கரமாக எரிந்தன. இவற்றுக்குள் ஏராளமான ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். 105 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீயணைப்பு படையினர் விரைந்து அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது.

எண்ணெய் கிணறு மற்றும் ரசாயான ஆலை எரிந்ததால் அதில் இருந்து நச்சுவாயு வெளிப்பட்டது. எனவே மக்கள் உரிய பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

LEAVE A REPLY