(Poem) கூடப் பிறந்தது

0
28

எங்களிடம்
என்ன இருக்கிறது..

அவர்கள்
விலையைக்
கூட்டுகிறார்கள்..

கடக்காரர்கள்
எங்கள் தேவைகளைக்
கட்டிப் போடுகிறர்கள்

எங்களிடம் என்ன
இருக்கிறது…

பால் இல்லா
விட்டால்..
வயிறு..
பழாகிறது..

பட்டினிக்கு
சட்டியைப்
போய் திறக்க..
சட்டியும்
முறைக்கிறது..முட்டியும்
முறைக்கிறது..
இந்த உறவுகளைப் போல..

மாதத்தில்
மட்டும் வலி
இல்லாத வரி
இருந்தது ஒரு
காலம்..
ஜனவரி…..
பெப்ரவரி..
இன்று..பரியாக
பாய்கிறது சந்தையில்
வற் வரி…ஒரு
சண்டைக் காரனைப் போல..

(ஏ.எச்.எம்.ஜிஹார்)

LEAVE A REPLY