ஈக்வேடாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்: 6.2 ரிக்டராக பதிவு

0
112

நேற்றிரவு நிலவரப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது. 2,500-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஈக்வேடாரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY