ஈக்வேடார் நிலநடுக்க பலி எண்ணிக்கை 507 ஆக உயர்ந்தது – 2500 பேர் காயம்

0
163

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் கடந்த சனிக்கிழமை மாலை 6.58 மணிக்கு மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்து தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுமார் ஐம்பதுமுறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதன்விளைவாக, சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு மற்றும் பேரிட நிவாரணப் படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றிரவு நிலவரப்படி, இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது. 2,500-க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.

இதுதவிர, கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் பல பிரேதங்கள் இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY