காட்டு யானையின் தாக்குதலில் பாடசாலை மாணவி படுகாயம்

0
187

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் யானையின் தாக்குதல் காரணமாக பாடசாலைச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை தும்பங்கேணி, கொச்சிபாம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சி. வேணுஜா (வயது 12) என்னும் சிறுமியே படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமி தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருக்கும்போது யானையின தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை காலை மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்தில் யானைகளின தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY