20,000 இற்கும் அதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ள நடவடிக்கை

0
221

இம்முறை 27,603 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் 25,200 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

15 பல்கலைக்கழகங்களுக்கும் 18 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இம்முறை பல்கலைக்கழக கற்கைநெறியை தொடர்வதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கையேட்டை எதிர்வரும் 24 ஆம் திகதி மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

-NF-

LEAVE A REPLY