(Poem) 80 களின் இறுதியில் இருந்த பேச்சுக்கள் (தொடர்-I)

0
66

இரவு எல்லாம்
இரண்டு சைற்றும்
பயறிங் நடந்ததில்
பலபேர் சரியாம்.

கொழும்புக்குப் போக
கொஞ்சம் சுணங்கி
எஸ்கோட் வந்த பின்
எல்லோரும் சேர்ந்து
ஒண்டாப் போறதுதான்
ஓரளவு சேப்டி.

குட்வின் சந்தில
கூடிக் கதைக்காக
கொம்மா துறையில
கொன்வே பஸ்ஸுக்கு
சிலிண்டர் அடிச்சதில்
சிதறிட்டாம் போன பஸ்.

இண்டைக்கு கடுமையா
இருக்கும் செக் பொய்ண்ட்.
ஐடி காட்டின்
அடையாள நம்பர
சரியாச் சொல்லாட்டி
சாகிறதுக்கு அடிப்பான்.

உடையும் சாமான
உள் பேக்ல வைக்கணும்
பை ரோட்டில சுற்றக்க
பாயுற பாய்ச்சல்ல
கையில இருக்கிறது
கவுண்டு உடையும்.

ராவு ‘ஜி’ ஆக்கள்
ரவுண்டு வரக்க
ஊருக்க புலி ஒண்டு
ஒழிச்சு இருந்தயாம்.
ஆளப் பிடிச்சு
அப்பிடியே கொண்டு போய்
கல்லக் கட்டி
கடல்ல இறக்கினயாம்.

இந்தியப் படையோட
இருக்கிற திரீஸ்டார்
சாக்கால மூடி
சாவடியில இருக்கான்.
சும்மா எண்டாலும்
சோதன சாவடியில்
பொம்மை ஆட்டினா
போச்சுது எல்லாம்.
மாட்டின ஆள
மண்றோசாக் கேம்புக்கு
கூட்டிப் போவான்
கொடுக்கிற அடிய
தாங்கிட்டு இருப்பதிலும்
தற்கொலை நல்லம்.

கல்முன பஸ்ஸுக்கு
கல்லடிச்சிருகான்கள்
எல்லாரும் நாளைக்கு
எதிர்ப்புத் தெரிவிக்க
கடைய மூடி
ஹர்த்தால் செய்யணும்.

ராவைக்கு சில நேரம்
ரவுண்டப் நடக்கலாம்
எல்லா ஆம்பிளயும்
ஏழு மணி முன்னால்
பாடசாலைக்கு வருமாறு
படைகள் சொல்லுமாம்.

இன்னும் வளரும்
இன்ஷா அல்லாஹ்

(Mohamed Nizous)

LEAVE A REPLY