முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட திருத்த பரிந்துரைகள் முன்வைப்பு

0
340

இலங்­கையில் தற்­போது அமு­லி­லுள்ள முஸ்லிம் விவாக விவா­கரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­காக ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­விற்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி பல பரிந்­து­ரை­களைச் சமர்ப்­பித்­துள்­ளது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி சமர்ப்­பித்­துள்ள சிபா­ரி­சு­க­ளா­வன.
* மண­ம­களின் சம்­மதம் மற்றும் மண­ம­களின் கையொப்பம் என்­பன திரு­மண சான்­றி­தழில் சேர்க்­கப்­பட வேண்டும்.

* முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 12லிருந்து 16 ஆக உயர்த்­தப்­பட வேண்டும்.

* மனை­வி­யினால் கோரப்­படும் “பஸஹ்”  விவா­க­ரத்­துக்­கான கார­ணங்­களில் பொருத்­த­மின்மை போன்ற கார­ணங்­களும் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும்.

* திரு­மண ஒப்­பந்­தத்தில் நிபந்­த­னைகள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். தலாக் இதப்லிஸ் அதா­வது விவா­க­ரத்தின் பின் தமது உரி­மை­களைக் கைய­ளித்தல் போன்ற விட­யங்­களை விவாக ஒப்­பந்­தத்­தி­லேயே இரு சாராரும் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.
இது தென், தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­தோடு கலா­நிதி சஹாப்தீன் தலை­மை­யி­லான குழு­வி­னாலும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.

* பல­தார மணத்­திற்­கான உரி­மைகள் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

* கணவன் மூல­மாக ஒரு தலைப்­பட்­ச­மாக வழங்­கப்­படும் விவ­கா­ரத்­திற்கு (தலாக்) விதி­மு­றைகள், மட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட வேண்டும் (கார­ணங்கள் எது­வு­மின்றி விவா­க­ரத்து வழங்­குதல் என்­பன)

* திரு­மணம் ஒன்று பதிவு செய்­யப்­படும் போது அத்­தி­ரு­மணம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் முதலாம், இரண்டாம், மூன்றாம் திரு­மணம் என்­பது தொடர்பில் தெளி­வாகக் குறிப்­பி­டு­வ­தற்­காக கட்டம் ஒன்று திரு­மணப் பதி­வேட்டில் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்.

* ஒரு பெண் தனது மஹரை பண­ரீ­தி­யான பெறு­ம­தியில் திருப்பிச் செலுத்­து­வதன் மூலம் எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மற்ற குலா விவா­க­ரத்து பெறும் உரிமை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

* தாம் விரும்பும் மத்­ஹபில் இருப்­ப­தற்­கான உரிமை சக­ல­ருக்கும் உண்டு என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வேண்டும். (ஷாபி, மாலிகி,ஹம்­பலி,ஹனபி)

* பரா­ம­ரிப்பு செலவு பெற்றுக் கொள்ளும் உரிமை விவா­க­ரத்தால் பாதிக்­கப்­பட்ட மனைவி பிள்­ளை­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு வழங்­கு­வதை வினைத்­தி­ற­னாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். இடைக்­கால மற்றும் கடந்த கால பரா­ம­ரிப்­பையும் உள்­ள­டக்க வேண்டும்.

* கைக்­கூலி, மீட்பு தொடர்­பான சரி­யான நடை­முறை காணப்­ப­ட­வேண்டும்.

* பஸஹ் மற்றும் தலாக்­கிற்கும் மதாஹ் வழங்­கப்­பட வேண்டும்.

* காதி நீதி­ப­தி­களின் நிய­மனம் அவர்­க­ளது தகைமை, சம்­பளம் என்­பன தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட வேண்டும்.

* பெண்கள் காதி நீதி­ப­தி­க­ளாக, நியா­ய­ச­காய அங்­கத்­த­வர்­க­ளாக, உப­தேச சபை அங்­கத்­த­வர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப் பட்டுள்ள குழு நீதியமைச்சரிடம் சமர்ப் பிப் பதற்காக தனது இறுதி அறிக்கை யைத் தயாரித்து வருகிறது. இந்த இறுதியறிக்கை யில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை உள்ளடக் குமாறு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY