Skype பாவனையாளர்களுக்கு ஓர் நற்செய்தி

0
500

இன்று பல தொடர்பாடலிற்கென பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும் ஸ்கைப் சேவைக்கு என்றுமே தனியான இடமுண்டு.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான இச் சேவையின் ஊடாக இலவச குரல்வழி அழைப்பு, வீடியோ அழைப்பு, உடனடிக் குறுஞ்செய்திகளை அனுப்புதல் போன்ற பயன்பாடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இவ் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இதுவரை காலமும் ஸ்கைப் (Skype) எனும் விசேட மென்பொருளினை கணினி அல்லது மொபைல் சாதனங்களில் நிறுவ வேண்டிய அவசியம் காணப்பட்டது.

ஆனால் முதன் முறையாக இதற்கு மாற்று தொழில்நுட்பத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது மைக்ரோசொப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் மைக்ரோசொப்ட் எட்ஜ் (MicrosoftEdge) எனும் இணைய உலாவியினை அறிமுகம் செய்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்த இணைய உலாவியின் ஊடாகவே ஸ்கைப் அழைப்புக்களை மேற்கொள்ளக் கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக எந்தவொரு நீட்சிகளும் (Plug-Ins) நிறுவவேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தலை மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்கைப்பிற்கான உத்தியோகபூர்வ ப்ளாக்கில் (Blog) வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY