புகலிடம் கோரி அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் கைது

0
150

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் இவ்வாறு நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து ஆண்களும், இரண்டு பெண்களும் இரண்டு சிறுவர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். பலநாள் ட்ரோலர் படகு மூலம் இவர்கள் அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்ல முயற்சித்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் பிரவேசிப்பதில் எவ்வித நலனும் ஏற்படப் போவதில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY