3 கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கொள்கலன் மீட்பு

0
179

குளியாப்பிட்டியாவில் மூன்று கைக்குண்டுகளுடன் ஐஸ்கிரீம் கொள்கலன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதியால் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு நீதவானின் அறிவுரைப்படி விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY