அரசியல் ரீதியாக பழிவாங்கல்; 9 ஊழியர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் வழக்குத்தாக்கல்

0
172

(றிசாத் ஏ காதர்)

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 9பேர் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு வருவதாக தெரிவித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (18) வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட ஊழியரொருவர் கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததனாலும், முன்னால் அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர்கள் என்பதனாலும் தான் உட்பட 8 ஊழியர்களுக்கு கடந்த வருடம் இடமாற்றங்கள் வழங்கப்பட்டது.

அரசியல் ரீதியாக முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிராக நீதிவேண்டி கடந்த வருடம் உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றில் வழக்கு தாக்கல் சொய்தோம். எங்களது இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதன்பின்னரும் தொடர்ச்சியாக தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வருட இறுதி மேலதிகக் கொடுப்பனவு, விடுமுறை, மருத்துவக் கொடுப்பனவுகள் என்பன தங்களுக்கு மாத்திரம் வழங்கப்படுவதில்லை இதுதொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளோம்.

அத்துடன் இவ்விடயம் சம்மந்தமாக எங்களது தலைமைக் காரியாலத்திலும் பலமுறை முறையிட்டும் இதுவரைக்கும் எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வருட இறுதி மேலதிகக் கொடுப்பனவுகள், மருத்துவக் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளத்துடனான விடுமுறை என்பவற்றைக் கோரியே மேற்படி வழக்கு தாக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் அதாஉல்லாவின் மற்றுமொரு ஆதரவாளருக்கும் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதனால் குறித்த நபரும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY