காத்தான்குடி, ஏறாவூர் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் வெள்ளியன்று

0
186

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்திலும் அதேவேளை, வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி ஸாஹிர் மௌலானா, என். சிறிநேசன், எஸ். வியாழேந்திரன் மற்றும் பிரதேச செயலாளர்களான எஸ்.எச். முஸம்மில், எஸ்.எல்.எம். ஹனீபா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதேச மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்திகள் பற்றி இக்கூட்டங்களில் கலந்துரையாடப்படவுள்ளன.

LEAVE A REPLY