(Poem) பொய்..!

0
60

lie-stampஇந்தஉலகம் பொய்
இந்தவாழ்க்கை பொய்…
எல்லாமே…
பொய்…

பொய்யை
கலப்படமாக்கி
பொய் உயிரூட்டப்
பட…மெய்யின்
சிரச் சேதத்தில்
பொய் போய்…
கலந்து கொள்கிறது..

இன்று எல்லார்
வாயிலும்
பொய்..
போனிலும்
பொய்….

இந்தக் கேடு
கெட்ட பொய்யாலே..
மெய்
அகதியாகி
இந்த உலகில்
தினம்,தினம்
அத்தளிகிறது..

ஆனால்
பொய்யோ..
சிலரின்
வாய்ப் பள்ளத்தாக்கில்
அருவியாக
ஓடுகிறது….

பொய்
எங்களுக்குள்
காதலாகிக்
குடி கொள்ள..
யாரை நம்புவது.?
யாரை விடுவது..?
என்று தெரியாது
நடக்கும் உலகமிது..

வீட்டில்
இருந்து கொண்டு
அப்பா வெளியே
என்று…பிள்ளைக்குச்
சொல்லிப்
பழக்கும் பொய்..அது
அறுகம் புல்லாய்
அவனது
இதயத் திடலில்
காலமெல்லாம்
முளைத்துக்
கொண்டே இருக்கிறது…
ஏ.எச்.எம்.ஜிஹார்

LEAVE A REPLY