கல்குடாவின் அபிவிருத்தி பணிகள் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைரினால் முன்னொடுப்பு

0
178

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைாின் முயற்சியினால் ஓட்டமாவடி வாழைச்சேனை பிரதான வீதியினை திருத்துவதற்காக 24 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று மாகாண சபை உறுப்பினர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மிக நீன்ட காலமாக பொது மக்களினாலும் சமூக ஆர்வலர்களினாலும், ஊடகங்களினாலும் சுட்டி காட்டப்பட்டு வந்த வாழைச்சேனை வை.எம்.ஏ மற்றும் ஹைராத், ஓட்டமாவடி தொடர் வீதியான 1.66 கீலோ மீற்றர் வீதியினை காபற் வீதியாக மாற்றியமைப்பதற்கான மும் மொழிவு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைாினால் வீதி அபிவிருத்தி தினணக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தினணக்கள பணிப்பாளா் அலுவலகத்தில் நேற்று (18) காலை இடம் பெற்ற சந்திப்பின் போது இவ் அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும், கல்குடாவின் அபிவிருத்தி பணிகளை தாம் தொடர்ந்தும் முன்னொடுக்கவுள்ளதாக அவா் குறிப்பிட்டார்.

இவ் வீதியானது மிகவும் நீண்ட காலமாக செப்பனிடப்படாமல் இருந்து வருகின்றமையினால் மழை காலங்களில் பாடசாலை மாணவா்கள், பொது மக்கள் பல அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY