ஈக்வடார் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 415 ஆக உயர்வு; பலர் கவலைக்கிடம்

0
37

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16ஆம் திகதி (சனிக்கிழமை) மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்து தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் இது 7.8 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை அறிவித்து, பின்னர் திரும்பப்பெற்றது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்து உள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி நவாஸ் அறிவித்துள்ளார். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, 350 பேர் இறந்ததாக அதிபர் அறிவித்திருந்தார்.

2,500-க்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

#Maalaimalar

LEAVE A REPLY