திணைக்களத்தில் பதிவு செய்வோருக்கே ஹஜ்ஜை நிறைவேற்ற முடியும்

0
168

முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஹஜ் கட­மைக்­காகத் தம்மைப் பதிவு செய்து கொள்­ப­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமே ஹஜ் கட­மையை மேற்­கொள்ள முடி­யு­மென திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் கிழக்கு மாகா­ணத்தில் இயங்­கி­வரும் திணைக்­க­ளத்தின் கிளை அலு­வ­ல­கத்தில் ஹஜ் கட­மைக்­கான பதி­வு­களை மேற்­கொள்ள முடியும்.

இது தவிர தூரப் பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்கள் கொழும்­பி­லுள்ள திணைக்­க­ளத்தின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கோ அல்­லது கிழக்­கி­லுள்ள கிளைக் காரி­யா­ல­யத்­திற்கோ நேரில் சமூ­க­ம­ளித்து பதி­வு­களை மேற்­கொள்ள முடி­யா­தி­ருந்தால் தொலை­பேசி மூலம் தமது தேசிய அடை­யாள அட்டை மற்றும் கட­வுச்­சீட்டு இலக்­கங்­களை வழங்கி பதி­வு­களை மேற்­கொள்ள முடியும் என ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் அமைச்சர் ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம். பாஹிம் தெரி­வித்தார்.

ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக திணைக்­க­ளத்­துக்கு இது­வரை 3800 பேர் விண்­ணப்­பித்­துள்­ளனர்.

விண்­ணப்­பங்கள் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்­கேற்ப பதி­வி­லக்­கங்கள் வழங்­கப்­படும்.

ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பிக்­கப்­பட்ட வரிசைக் கிர­மங்­க­ளுக்­கேற்­பவே ஹஜ்­ஜா­ஜிகள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். விண்­ணப்­பித்த சக­ல­ருக்கும் திணைக்­களம் அவர்­க­ளது ஹஜ் பய­ணத்தை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரி கடி­தங்­களை அனுப்பி வைத்துள்ளது.

ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்கள் ஹஜ் முகவர்கள் ஊடாகவன்றி தனிப்பட்ட முறையிலேயே அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY