ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் இன்சமாமுல் ஹக்

0
263

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக், ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர்-10 சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், வெஸ்ட் இண்டீசுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

அவர்களது இத்தகைய முன்னேற்றத்துக்கு இன்சமாமின் பயிற்சியே முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தானுடனான ஒப்பந்த காலம் ஆண்டின் இறுதி வரை இருந்த நிலையில், அவரை தங்கள் அணிக்காக பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பியது. இதையொட்டி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு, இன்ஜமாமை பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நேற்று அந்த பொறுப்பில் இருந்து இன்சமாமுல் ஹக்  விடுவிக்கப்பட்டார்.

46 வயதான இன்சமாமுல் ஹக்  உல்-ஹக் பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வு குழு தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY