நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 272 ஆக உயர்வு

0
69

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6.58 மணிக்கு மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்து தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் கணித்தது. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை அறிவித்து, பின்னர் திரும்பப்பெற்றது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு மற்றும் பேரிட நிவாரணப் படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்து உள்ளது. 2,500-க்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY