முன்னாள் ஜனாதிபதியின் கணக்கு பற்றி அவரிடமே கேளுங்கள்: ரணில் விக்ரமசிங்க

0
179

அஸ்கிரிய மாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தின தேரர் மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் ஆகியோரை சந்தித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க  ஆசி பெற்றுக்கொண்டார்.

அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்ற அவர், மாநாயக்க தேரருடன் கலந்துரையாடிய பின், மாநாயக்க தேரர் பதவிக்கான தகைமை நியமனம் பத்திரம் வழங்கும் வைபவம், ஜனாதிபதி தலைமையில் மே மாதம் 17ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க மங்கள மண்டபத்தில் நடைபெறும் எனவும் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து பிரதமர் மல்வத்து மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து புதிய வருடத்துக்கான ஆசியைப் பெற்றுக் கொண்டார். புத்தாண்டு சமயத்தில் கொழும்புக்கு வெளியில் இருந்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களிடம் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் அது குறித்து பாராளுமன்றத்திலேயே பேச வேண்டும் எனக் கூறினார்.

புத்தாண்டை கொண்டாட மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய கடைகளுக்கு சென்றதை விட நகைகளை அடகுவைக்கும் கடைகளிலேயே காணப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, “அவர் கணக்கிட்டிருந்தால், அவரிடம் சென்று கேளுங்கள்” என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கருத்துக்களை வெளியிட இது சந்தர்ப்பம் அல்ல எனக் கூறிய பிரதமர், தேவையான விடயங்களை பின்னர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY