உலகின் மிக நீளமான மலைப்பாம்பு மலேஷியாவில் பிடிக்கப்பட்டது

0
172

மலேஷியாவின் பெனாங் தீவிலுள்ள சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற பாயா டெருபோங் மாவட்டத்தில் மேம்பாலமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது நிர்மாண ஊழியர்களால் இந்த பாம்பு அவதானிக்கப்பட்டது. அதையடுத்து மலேஷிய சிவில் பாதுகாப்புப் படையின் அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

30 நிமிட நேர முயற்சியின் பின்னர் இம்மலைப்பாம்பை சிவில் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.  26 அடி நீளமான இம்மலைப்பாம்பு 250 கிலோகிராம் எடையுடையதென மலேஷிய சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் இதுவரை பிடிக்கப்பட்ட மிக நீளமான பாம்பு இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் பிடிக்கப்பட்ட 25 அடி நீளமான 58.8 கிலோகிராம் மலைப்பாம்பு ஒன்றே உலகில் பிடிக்கப்பட்ட மிக நீளமான பாம்பு என கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது மலேஷியாவில் பிடிக்கப்பட்டுள்ள மலைப்பாம்பு 90 கிலோகிராம் அதிக எடையைக் கொண்டுள்ளது.  எவ்வாறெனினும் உலகில் இதைவிட பெரிய பாம்புகளும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 1912 ஆம் ஆண்டில்  சுமார் 10 மீற்றர் (32 அடி) நீளமான பாம்பு ஒன்று இந்தோனேஷிய அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

-MN-

LEAVE A REPLY