ரவீந்திர ஜடேஜாவின் திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: பொலிஸ் விசாரணை

0
178

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவிற்கும், ராஜ்கோட்டை சேர்ந்த பொறியாளர் ரீவா சோலங்கிக்கும், கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயார்த்தம் நடைபெற்றது.

இன்று இவர்களின் திருமணம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றுள்ளது.தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் புதிதாக இணைந்த குஜராத் லயன்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார்.

திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்கு முன்பு ஜடேஜா தனது வாள் சுற்றும் திறமையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜாவின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது உறவினர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அவரது உறவினர்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து சம்பவம் குறித்து ராஜ்கோட் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், தற்காப்புக்காக மட்டுமே சுட வேண்டும் என்பது சட்ட நடைமுறை என்றும், இந்த நடைமுறைகளை மீறும் போது 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY