குறை கூற வேண்டாம்; சேவை செய்ய முன்வாருங்கள்: அன்வர் நௌஷாத்

0
150

உண்மையாகவே கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களுடனான உறவை மதிக்கின்ற ஒரு மக்கள் பிரதிநிதி எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் மாத்திரமே. அவர் மீது களங்கத்தை உண்டு பண்ண தமிழ் முஸ்லீம் உறவில் விரிசலை உண்டு பண்ண வேண்டிய தேவை இன்று தமிழ் கட்சியொன்றுக்கு வந்துள்ளதா என சந்தேகிக்க தோன்றுகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளர் அன்வர் நௌஷாத் நேற்று ஏறாவூரில் இடம்பெற்ற இளைஞர் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலில் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்,

“இளைஞர்கள் மிக அவதானத்துடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்லாது, முழு இலங்கையிலும் இன்று தமிழ் பேசும் மக்களின் தெரிவாக அ.இ.ம.க வே உள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாத மு.கா. மற்றும் த.தே.கூ என்பன தமது இனவாத அரசியலுக்கு லாபம் தேடும் முகமாகவே மக்களிடம் உணர்வு ரீதியில், அபவாதங்களை கிளப்பி வருகின்றன. தமது கட்சிக்குள்ளும் வெளியிலும் அவர்களுக்கிருக்கும் அழுத்தங்களை மக்களிடம் மறைக்க வழியில்லா நிலையில், இவர்களின் அரசியல் இறங்கு முகமானது என இவர்களே கூறிக்கொள்ளும் வாக்கியந்தான் நமது தேசியத்தலைமை, மற்றும் தவிசாளர் மீதான சாடல் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

எமது மாவட்டத்தின் ஒரு மக்கள் பிரதி நிதி போகுமிடம் எல்லாம் கௌரவ.அமீர் அலி அமைச்சர் மீது குறை கூறி வருகின்றார். அவருக்கு வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் கிடையாது, மக்கள் பொறுப்பும் கிடையாது தனது பதவிக் காலத்தை குறை கூறியே கழித்து விடுவார் போலும்.கல்குடாத் தொகுதி வாக்குகளில் பெரும்பான்மை முஸ்லீம் வாக்குகளை தன்னகத்தே கொண்ட அமைச்சர் அமீர் அலி அவர்களை ஓட்டமாவடி மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பது அவரின் அறிவு மட்டத்திற்கு நல்லதொரு உதாரணமாகும்.

இதே போன்று முஸ்லீம் கட்சி, தனது வங்குரோத்தை மறைக்க அ.இ.ம.க மீது பழி போட்டுப் பழகிவிட்டது. அவர்களின் உட்கட்சி விவகாரத்திலும் நம்மையே வலிந்து பழி சுமத்துவது அவர்களின் இயலாமை தவிர வேறொன்றுமில்லை.

மக்கள் உணர்ந்து விட்டார்கள், வேறு வழியிலாத நிலையில் சமூகத்தில் அக்கறை கொண்டோரையும், சமூகத்திற்காக அற்பனிப்போரையும் சாடும் இந்த அரசியல் வெகு விரைவில் முடிவுக்கு வந்து விடும். இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் உள்ளக அதிகாரங்களையும் நமது கட்சி பெறுகின்ற போது முழுமை பெற்ற மக்கள் சேவையினை வழங்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY