150 மீற்றர் அருகாமையில் புதிய காணியை வழங்கினால் தம்புள்ளை பள்ளியை அகற்ற இணங்குவோம்

0
265

நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிப்பு

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்ள பள்­ளி­வாசல் நிர்­வாகம் புதி­தாக பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்­துக்­கொள்ள தற்­போது பள்­ளி­வாசல் அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து 150 மீற்றர் தூரத்தில் 2 ரூட் காணியை தர வேண்டும் எனவும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யிடம் கோரி­யுள்­ளது.

நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் கொழும்பு தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் ரஞ்சித் பர்­ணான்­டோ­வுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

நீண்­ட­கா­ல­மாக தீர்த்து வைக்­கப்­ப­டா­தி­ருக்கும் தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதில் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை அக்­கறை கொண்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் கோரிக்­கைகள் ஆரா­யப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் உறுதி வழங்­கி­யுள்ளார்.

பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­திகள் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைத் தலை­வ­ரு­ட­னான சந்­திப்பு தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில்,

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தற்­போது அமைந்­துள்ள இடத்­தி­லி­ருந்து 150 மீற்றர் தூரத்தில் பிர­தான பாதைக்­க­ருகில் 2 ரூட் காணி கோரி­யுள்ளோம். இதே­வேளை 2013 ஆம் ஆண்டு அகற்­றப்­பட்ட இந்து கோவி­லுக்கு காணி ஒதுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் கோரிக்கை முன்­வைத்­துள்ளோம்.

பள்­ளி­வா­ச­லுக்குக் கருகில் தற்­போது 33 குடும்­பங்கள் வசித்­து­வ­ரு­கின்­றன. இவற்றில் 3 தமிழ் குடும்­பங்­களும் 18 முஸ்லிம் குடும்­பங்­களும் 12 சிங்­கள குடும்­பங்­களும் அடங்­கு­கின்­றன. இந்தக் குடும்­பங்­க­ளுக்கும் காணிகள் ஒதுக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ளோம்.

தம்­புள்ளை புனித பூமி அபி­வி­ருத்தித் திட்­டத்­துக்கு ஒத்­து­ழைக்கும் முக­மா­கவே எமது பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்­வ­தற்கு உடன்­பட்­டுள்ளோம். தம்­புள்­ளையில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யி­ன­ருடன் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம் என்­ப­தையும் தெளி­வு­ப­டுத்­தினோம் என்றார்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு விரைவில் உரிய தீர்­வினைப் பெற்றுத் தரு­வ­தாக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தலைவர் உறு­தி­ய­ளித்­துள்­ள­தா­கவும் சலீம்தீன் தெரி­வித்தார்.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் 2012 ஆம் ஆண்டு தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­ம­கா­வி­காரை அதி­பதி இனா­ம­லுவே தேரரின் தலை­மை­யி­லான குழு­வி­னரால் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தாக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தம்­புள்ளை புனித பூமியில் சட்ட விரோ­த­மாக அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­று­மாறு கோரியே தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­துடன் ஆர்ப்­பாட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.

பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொள்ள முடி­யாது என பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் முஸ்லிம் அர­சியல் வாதி­களும் தெரி­வித்து வந்­தனர். ஒரு சிலர் பள்­ளி­வாசல் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­ப­டு­வதை ஆதரித்தனர்.

பள்ளிவாசல் நிர்வாகம் தற்போது பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் இடம்மாறிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரங்கிரி ரஜமகாவிகாரை அதிபதி இனாமலுவே தேரர் பள்ளிவாசல் தம்புள்ளை புனித பூமியிலிருந்து அகற்றப்பட்டு புனித பூமிக்கு அப்பால் நிர்மாணிக்கப்படவேண்டும் என தொடராக குரல் எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#Vidivelli

LEAVE A REPLY