(Photos) தாருல் அதரின் 11வது இரத்ததான முகாம்; 157 பேர் உதிரம் வழங்கினர்

0
161

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் ‘உதிரம் வழங்குவோம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் 11வது மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி-02 ஜாமிஉல் அதர் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பிரிவு பொறுப்பாதிகாரி எஸ்.செல்வராஜா, தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நிஸார் உட்பட ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், ஆண், பெண் சகோதர, சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் மற்றும் இரத்த வங்கி அதிகாரி யஸிந்து பெர்னான்டோ ஆகியோரினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

இங்கு 157 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் விவேக் தெரிவித்தார்.

குறித்த தாருல் அதர் அத்த அவிய்யா தஃவா அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளையும்,மார்க்கப் பிரச்சார பணிகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3-DSC_89432-DSC_8980 5-DSC_8973 6-DSC_8882 7-DSC_8886 8-DSC_8914 10-DSC_8928 11-DSC_8908 12-DSC_8899 DSC_0007 DSC_0032 DSC_8936 DSC_8940 DSC_8959 DSC_8964 DSC_8970

LEAVE A REPLY