காத்தான்குடியில் மின்னொளியில் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி – அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று

0
284

(எம்.ஐ.அப்துல் நஸார்/முஹம்மட் பயாஸ்)

அக்பர் ஹாஜியார் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான கால் பந்தாட்டச் சுற்றுப்போட்டி விக்டரி விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் விக்டரி விளையாட்டு மைதானத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது.

நொக் அவுட் முறையிலான இந்தச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றிய எட்டு கால் பந்தாட்ட அணிகளிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன.

முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று (17) மாலை ஐந்து மணிக்கு விக்டரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது இந்தப் போட்டியில் காத்தான்குடி சவுண்டஸ் விளையாட்டுக் கழகமும் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு; நடைபெறவுள்ளதோடு இந்தப் போட்டியில் காத்தான்குடி விக்டரி விளையாட்டுக் கழகமும் காத்தான்குடி பதுரியா விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக அம்பாறை மாவட்ட சம்பியன் கழகங்களுள் ஒன்றான ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சம்பியன் கழகங்களுள் ஒன்றான இக்னேசியஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான சினேகபூர்வ கால் பந்தாட்டப் போட்டியொன்று நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இறுதிப் போட்டி இன்று இரவு 10.30 மணிக்கு மின்னொளியில் நடைபெற்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு போட்டிகள் நிறைவுபெறும்.

12992823_1008348902578366_1453268489_n 13014939_1008348922578364_1671887989_n 13046194_1008348805911709_904582317_n

LEAVE A REPLY